Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பை கால்பந்து - இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா தகுதி

உலகக்கோப்பை கால்பந்து – இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா தகுதி

-

முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் பலமிக்க இரு அணிகளும் ஆக்ரோஷமாக தொடங்கின. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜென்டினா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி முதல் கோல் அடித்தார்.

இந்த கோல் மூலம் ஃபிஃபா உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி. அர்ஜென்டினாவின் கோல் எண்ணிக்கையை மெஸ்ஸி தொடங்கிவைக்க அவருக்கு பக்கபலமாக இருந்தது அணியை முன்னிலை பெறவைத்தது ஜூலியன் அல்வாரெஸ். இன்றைய ஆட்டத்தின் ஹீரோ இவர் எனலாம். ஏனென்றால், மெஸ்ஸி கோல் அடித்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் சிறப்பான கோல் ஒன்றை அடித்து முதல் பாதியில் குரோஷியாவை விட 2 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறவைத்தார்.

இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 69வது நிமிடத்திலும் ஜூலியன் அல்வாரெஸ் கோல் அடித்து கெத்து காட்டினார். இதனால் அர்ஜென்டினா 3 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. மெஸ்ஸி மற்றும் அல்வாரெஸ் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள குரோஷியா பல முறை முயன்றும் முடியவில்லை. ஆட்டத்தின் இறுதியில் 3 – 0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக நடப்பு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

MUST READ