கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் மேசையில் நேந்திர சிப்ஸ் சிற்றுண்டியாக இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற ஏலங்களில் முறுக்கு, மிக்சர் போன்ற காரவகைகள் இடம்பெற்று வைரலானது.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது. அவரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகும். இதேபோல் அஜிங்க்யா ரஹானேவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி வரும் இளம் வீரர்களான சயீக் ரசீத், நிஷாந்த் சிந்துவை சிஎஸ்கே அணி முறையே ரூ.20 லட்சம், ரூ.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. சென்னை அணியில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த பென் ஸ்டோக்ஸ், எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தோனி தலைமையின் கீழ் விளையாடவே விரும்புவார்கள். ஏனென்றால், தோனியை அனைவரும் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

அதேவேளையில் சாம் கரனை ₹18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததை அடுத்து, ‘சுட்டிக் குழந்தை’ சாம் கரனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் விடை கொடுத்தது.


