17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 7வது லீக் போட்டியில் சென்னைvsகுஜராத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 7வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இதே மைதானத்தில் முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி அடைந்துள்ள சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, தனது வெற்றி கணக்கை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய குஜராத் அணி, அதே உத்வேகத்துடன் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, தங்களது வெற்றி பயணத்தை தொடர முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது வெற்றியை ருசிக்க சென்னை, குஜராத் அணிகள் மல்லுகட்டும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.