ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் 824 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 765 புள்ளிகளை பெற்றுள்ளார்.
அதேவேளையில் 2வது இடத்தில் இருந்த சுப்மான் கில் ஒரு இடம் சரிந்து 3வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 746 புள்ளிகளுடன் 4வது இடத்தில் தொடருகிறார். அயர்லாந்தின் ஹாரி டெக்டார் 5வது இடத்தையும், டேவிட் வார்னர் 7 வது இடத்தையும், இலங்கையின் நிசாங்கா 8வது இடத்தையும் பிடித்துள்ளனர். சர்வதேச தரவரிசை பட்டியலில் ஆசிய வீரர்களே பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளனர்.