Homeசெய்திகள்விளையாட்டுஆஸியை அடித்து நொறுக்கிய இந்திய அணி... தலைமுறை தாண்டிய சாதனை வெற்றி

ஆஸியை அடித்து நொறுக்கிய இந்திய அணி… தலைமுறை தாண்டிய சாதனை வெற்றி

-

ஆஸ்திரேலிய அணி 16 போட்டிகளில் தொடந்து வெற்றி பெற்று 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை அடைந்தபோது, ​​சவுரவ் கங்குலியின் இந்திய அணி ஸ்டீவ் வாக் தலைமையிலான அந்த அணியை எதிர்கொண்டது. 2021-ல் பகலிரவு டெஸ்டில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, அப்போதைய தற்காலிக கேப்டன் அஜிங்க்யா ரஹானே, ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இப்போது ஜஸ்பிரித் பும்ரா தலைமையில், ஆஸ்திரேலியாவை வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. பெர்த் டெஸ்டில், இப்போது ரோஹித் ஷர்மா அணியில் இல்லை. விராட் கோலி ஃபார்மில் இல்லை. வேகமான பிட்ச் இருந்தது. இரண்டு அறிமுக வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், ஜஸ்பிரித் பும்ராவே இந்த வெற்றியை கற்பனையில் கூட நினைத்து இருக்க மாட்டார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தபோது, ​​அதன் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ஊடகங்களும் சில வீரர்களை புகழ்ந்தும், சிலரை விமர்சித்தும் பேசி வந்தன. விராட் கோலி சிறந்த ஆட்டக்காரர். ஆனால் அவரது ஃபார்ம் மோசமாக உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் குத்திக்காட்டினர். இந்திய அணியின் கேப்டன் சி அனுபவம் குறைந்த வேகப்பந்து வீச்சாளரின் கையில்தான் உள்ளது என்று விமர்சித்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப்போட்டி கிரிக்கெட் போட்டியல்ல, போர் என்று நினைவுபடுத்தினார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தொடர்ந்து வன்மமாக விமர்சிக்கப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணியை 5 முறை சாம்பியனாக்கிய ரோஹித் சர்மாவிடம் இருந்து பும்ரா அனைத்து குணங்களையும் கற்றுக்கொண்டார். அணியை எப்படி ஊக்கப்படுத்துவது என்பது அவருக்குத் தெரியும். அவர் டி20 உலகக் கோப்பை 2024 போன்று ரோஹித் ஃபார்முலாவை கையாண்டார்.

முதல் இன்னிங்சில் 11வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை வதம் செய்தார். அவரது பாணியை பின்பற்றி அணியின் மற்ற வீரர்களும் உற்சாகமடைந்தனர். அதன்பிறகு, இளம் தொடக்க ஆட்டக்காரர்களான ஷட்கவீர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தினர். ​​​​விராட் கோலி ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் தன்னை விமர்சித்ததை மனதில் பதியம் போட்டு வைத்திருந்தார். 17 மாதங்களுக்குப்பிறகு சதம் அடித்து தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை பேட்டால் அடித்து நொறுக்கினார்.
பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் முதல் தோல்வி இதுவாகும்.

கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரின் புயல் பந்துவீச்சால், முதல் கிரிக்கெட் டெஸ்டின் நான்காம் நாளில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தனது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தியா இப்போது 15 ஆட்டங்களில் 9 வெற்றி, 5 தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் 110 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதாவது 61.11 சதவீத புள்ளிகள்.
ஆஸ்திரேலியா 57.69 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 13 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிரா என 90 புள்ளிகள் பெற்றுள்ளது.

இந்தியா நிர்ணயித்த 534 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, முதலில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டன் பும்ரா (42 ரன்களுக்கு 3 விக்கெட்), முகமது சிராஜ் (51 ரன்களுக்கு 3 விக்கெட்) ஆகியோரின் கூர்மையான பந்துவீச்சில் 58.4 ஓவர்களில் 238 ரன்களுக்குச் சரிந்தது. இது ஆஸ்திரேலிய மண்ணில் ரன்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி, ஆசியாவிற்கு வெளியே இரண்டாவது பெரிய வெற்றி இது. இதற்கு முன்பு 1977 டிசம்பரில் மெல்போர்னில் இந்தியா 222 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆகஸ்ட் 2019 ல் நார்த் சவுண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 318 ரன்கள் வித்தியாசத்தில் ஆசியாவிற்கு வெளியே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும்.

MUST READ