Homeசெய்திகள்விளையாட்டுஏழைகளை கோடீஸ்வரனாக்கும் ஐபிஎல்: மூலை முடுக்கெல்லாம் தேடும் அணிகள்

ஏழைகளை கோடீஸ்வரனாக்கும் ஐபிஎல்: மூலை முடுக்கெல்லாம் தேடும் அணிகள்

-

- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் நாடு முழுவதும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை வெளிப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இப்போது உலகின் தலைசிறந்த விளையாட்டு லீக்குகளில் ஒன்று. வெவ்வேறு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் புதிய வீரர்களை தேர்ந்தெடுக்க நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் வகைவீசி தேடுகின்றனர். நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஜெட்டாவில் நடைபெற்ற இரண்டு நாள் ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தம் 366 இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

2011-ம் ஆண்டு வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்ற தனது கனவை கைவிட்டு, கிரிக்கெட்டில் இருந்து விலகி கட்டிடக் கலைஞரானார் வருண் சக்ரவர்த்தி. பின்னர் திடீரென்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் சுழற்பந்து வீச்சாளராக மாறினார். சக்ரவர்த்தி தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் (TNPL)வீரரானார். இரண்டு சீசன்களுக்குப் பிறகு, ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.8 கோடியே 40 லட்சம் கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்தது.

2016 ஆம் ஆண்டு வரை,  தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தில் சில கிரிக்கெட் விளையாடி வந்தார். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடுவதற்கே சிரமமாக இருந்தது அவரது வாழ்க்கை. ஆனால் ஒரு வருடம் கழித்து செயல்திறன் அடிப்படையில், கிங்ஸ் XI பஞ்சாப் அவரை 3 கோடிக்கு வாங்கியது. ஜனவரி 2021 கபாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வரலாற்று வெற்றியில் நடராஜனும் முக்கியமானவர். நவம்பர் 24 அன்று, 2025 சீசனுக்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் 10.75 கோடிக்கு அவரை வாங்கியது.

'அதிக சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். தொடர் இதுதான்'- விரிவான தகவல்!
File Photo

ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் வசிக்கும் நவ்தீப் சைனி, 2013-ல் ரஞ்சி டிராபியில் விளையாடி வந்தார், டெல்லி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சுமித் நர்வால் அவரை ஐபிஎல் போட்டிக்கு அழைத்து வந்தார். சைனி அதுவரை முறையான பயிற்சியைப் பெறவில்லை. அவரிடம் பந்து வீச நல்ல ஷூ கூட இல்லை. ஆனால் அவரது திறமை தற்போதைய இந்திய பயிற்சியாளர் கௌதம் கம்பீரை மிகவும் கவர்ந்தது. ஒரு வாரம் கழித்து சைனிக்கு ரஞ்சி டிராபியில் அறிமுகம் என்ற ஆச்சரியமான முடிவை அவர் எடுத்தார். அந்த வரலாற்று சிறப்புமிக்க கபா வெற்றியில் சைனியும் ஒருவராக இருந்தார்.

ரூர்க்கியைச் சேர்ந்த பொறியாளர், அமெச்சூர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் வீரர் ஆகாஷ் மத்வால். ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக 2022 ல் ஐபிஎல் விளையாடாதபோது, ​​​​ஆகாஷ் மத்வால் மும்பை இந்தியன்ஸுக்காக களமிறங்கினார். டெத் ஓவர்களில் கேப்டன் ரோகித் சர்மாவின் விருப்பமான வீரராக மாறினார் ஆகாஷ். இப்போது ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1 கோடியே 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். மத்வால் உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரகாண்ட் அணிக்காக விளையாடி தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்.

MUST READ