spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் - இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக் ரூ.13.25 கோடிக்கு ஏலம்

ஐபிஎல் – இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக் ரூ.13.25 கோடிக்கு ஏலம்

-

- Advertisement -

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெற்றது.

இதில் செட் 1 எனப்படும் பேட்ஸ்மேன்கள் அடங்கிய ஏலத்தில் முதல் ஆளாக நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் அடிப்படை விலையான 2 கோடிக்கு குஜராத் அணிக்கு விற்பனையாளர். இவரை வேறு எந்த அணிகளும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. சமீப காலமாக டி20 போட்டியில் திணறிவரும் வில்லியம்சன் 2 கோடி ரூபாய்க்கு மட்டுமே விலை போனார்.

we-r-hiring

அடுத்ததாக இங்கிலாந்தின் எதிர்கால நட்சத்திரம் ஹரி புரூக்-க்கு மும்முனை போட்டி நடந்தது. பெங்களூரு, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 13.25 கோடிக்கு ஹைதராபாத் அணி ஹரி புரூக்கை வாங்கியது. அடுத்ததாக மயாங்க் அகர்வாலை எடுக்க பஞ்சாப்,சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் போட்டி போட்டன. இறுதியில் இவரையும் 8.2 கோடி வாங்கியது ஹைதராபாத் அணி.

அடுத்ததாக இந்தியாவின் அஜின்கியா ரகானேவை 50 லட்சத்திற்கு சென்னை அணி நிர்வாகம் எடுத்தது. இவரும் டி20-க்கு ஏற்றவாறு ஆட மாட்டார் என்று மற்ற அணிகள் இவரை எடுக்க முன்வரவில்லை. மேலும் சென்னை அணி ஏற்கனவே அதிக வயதானவர்களை கொண்டு உள்ள நிலையில் இவரை போன்று மீண்டும் வயதான ஒரு வீரரை எடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..

அடுத்ததாக இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், மற்றும் தென்ஆப்பிரிக்க இளம் வீரர் ரெய்லி ரூசோவ் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. அடுத்ததாக செட்டு 2 எனப்படும் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் சாம் கரன்க்கு போட்டா போட்டி நடந்தது பஞ்சாப்,மும்பை அணிகள் மல்லுக்கட்ட இறுதியில் பஞ்சாப் அணி 18.5 கோடிக்கு சாம் கரணை வாங்கியது. ஐபிஎல் வரலாற்றிலேயே 18 கோடிக்கு மேல் விற்பனையான ஒரே வீரர் சாம் கரன் மட்டுமே. மேலும் ஐபிஎல் வரலாறு அதிக விலைக்கு விற்பனையான வீரர் சாம் கரன் ஆவார்.

MUST READ