spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஎன்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன்- எம்.எஸ்.தோனி

என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன்- எம்.எஸ்.தோனி

-

- Advertisement -

என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன்- எம்.எஸ்.தோனி

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் 2023 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ்.தோனி, “என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன். இந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவதே முக்கியம். சேப்பாக்கத்தில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ரசிகர்கள் எனக்கு நிறைய அன்பைக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது கூட நான் பேசுவதை கேட்க நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். வயதாகும்போதுதான் அனுபவம் என்பது வரும். சச்சின் டெண்டுல்கர் தனது 16,17 வயதிலேயே விளையாடத் தொடங்கிவிட்டதால், அவருக்கு மட்டும் இளம் வயதிலேயே அந்த அனுபவம் வந்துவிட்டது. எனக்கு வயதாகிவிட்டது, அதை மறைக்க முடியாது” எனக் கூறினார்.

we-r-hiring

41 வயதான எம்.எஸ். தோனி, ஆகஸ்ட் 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஜூலை 2019 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஆனால் அவர் ஐபிஎல்-ல் தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ