கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மா – ரித்திகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா, கடந்த 2015ஆம் ஆண்டு ரித்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ரோகித் சர்மா – ரித்திகா தம்பதியினருக்கு நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனை ரோகித் சர்மா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரோகித் சர்மா குடும்பத்தினருடன், புதிதாக பிறந்துள்ள குழந்தை இடம்பெற்றுள்ளது. இதனிடயே, ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ள ரோகித் சர்மாவுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர்தவான், டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட பலரும் இணையத்தில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதனிடையே, ரித்திகா கர்ப்பமாக இருந்ததால் ஆஸ்திரேலியிவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடருக்கு ரோகித் சர்மா ஆஸ்திரேலியா செல்லாமல் மனைவியுடன் இருந்தார். இந்நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், அவர் டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.