இந்திய அணியை பொறுத்தவரை, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் எதிர்பாராத வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அது ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்தபடி முடிந்தது. சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் 3-1 என்ற கணக்கில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறவில்லை.
இந்திய அணியின் தோல்வியை விட, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களால் இந்த தொடரில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ய முடியாமல் போனதால், அடுத்த டெஸ்ட் தொடரில் விளையாடுவது கடினம். அவர்களின் ஆட்டத்தில் ஏமாற்றமே அதிகம்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி மீது கவனம் செலுத்தி வருகிறது. ஜூன் 2025 ல், இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இது அடுத்து வரும் உலக டெஸ்ட் கோப்பை அணிக்கு செல்லும் முக்கியத் தகுதிக்கு அடிப்படையாகவும் இருக்கும். அடுத்த 6 மாதங்களுக்குள் தற்போதைய இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் வருமா? இல்லையா? என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
இந்நிலையில், விராட், ரோஹித் மட்டுமல்ல, தற்போதைய அணியில் 5 வீரர்கள் அடுத்த தொடரில் இருந்து வெளியேறலாம். 6 மாதங்களுக்கு முன்பு இந்திய அணியை டி20 உலக சாம்பியனாக்கிய ரோஹித்தின் நிலைமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 3 டெஸ்ட் தொடர்களில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார். ஆஸ்திரேலியாவில், அவர் 31 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கடைசி டெஸ்டில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. ஒரு கேப்டனாக, அவர் அணித் தேர்வு, டாஸில் முதலில் பேட்டிங், பவுலிங் போன்ற முடிவுகள், பீல்ட் பிளேஸ்மென்ட்டிலும் மிகவும் மோசமாக இருப்பதை நிரூபித்தார். இந்நிலையில், அவரது டெஸ்ட் கேரியர் தற்போது முடிந்துவிட்டதாகவே தெரிகிறது.
நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸை சதத்துடன் தொடங்கினார். அதன் பிறகு இந்தத் தொடர் முழுவதும் அவர் சோபிக்கவில்லை. 8 இன்னிங்ஸில், அவரால் 90 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கோஹ்லி சில சமயங்களில் கிரீஸில் நிலைத்து நிற்கும் தைரியத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவரால் பலவீனத்தை சமாளிக்க முடியவில்லை. கோஹ்லி இந்தத் தொடரில் 8 முறை ஆட்டமிழந்தார்.
ஒவ்வொரு முறையும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை ஆட முயன்றபோது விக்கெட்டுக்கு இரையானார். எனவே அவர் இங்கிலாந்து செல்வது கடினம்.
தொடரின் நடுவில் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வு பெற்றதை அடுத்து, அனைவரின் பார்வையும் ரவீந்திர ஜடேஜா மீது உள்ளது. அவரால் பந்துவீச்சில் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. அவர் அதிகம் பயன்படுத்தப்படவில்லை. இருந்தபோதும் அவரது நிலைமை கேள்வ்க்குறியாகவே உள்ளது. ஜடேஜா 5 இன்னிங்ஸ்களில் 135 ரன்கள் எடுத்தார். 4 இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.
21 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இந்த தொடரில் சர்வதேச அளவில் அறிமுகமானார். பெர்த்தில் விளையாடிய முதல் டெஸ்டில் அவர் கொஞ்சம் சிறப்பாக விளையாடினார். ஆனால் அடிலெய்டில் நடந்த பிங்க் பால் டெஸ்டில் அவரால் அணிக்கு எந்த பங்களிப்பையும் செய்ய முடியவில்லை. இரண்டு போட்டிகளிலும், நீண்ட ஸ்பெல்களை வீசுவதில் அவருக்கு அனுபவம் இல்லாதது தெளிவாகத் தெரிந்தது. ஆகையால், இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவருக்கு கடினமாகத் தெரிகிறது.
பெங்கால் அணியின் அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் நீண்ட நாட்களாக இந்திய அணியில் வாய்ப்பு கேட்டு வந்தார். இந்த முறை அவரும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் தோல்வி, தொடக்கத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் இருந்தபோதிலும், ஈஸ்வரன் தொடர் முழுவதும் விளையாட அழைக்கப்படவில்லை.
இந்தியா ஏ போட்டிகளில் அவர் தோல்வியடைந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். அவருக்கும் இங்கிலாந்தில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமே.