Homeசெய்திகள்விளையாட்டுலெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்த ஷிகர் தவான்!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்த ஷிகர் தவான்!

-

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஷிகர் தவான், ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான், கடந்த சில நாட்களுக்கு முன் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான தவான், ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என 260க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள் உள்பட 24 சதங்களையும் அவர் அடித்துள்ளார். தவானின் ஒய்வு அறிவிப்புக்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஷிகர் தவான் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் போட்டித் தொடரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்துள்ளார். வரும் செப்டம்பர்
மாதம் தொடங்கும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடுகிறார். இது தொடர்பாக தவான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிரிக்கெட் விளையாடுவதற்கான உடல் தகுதியுடன் தான் உள்ளதாகவும், கிரிக்கெட் தமது வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தமது கிரிக்கெட் நண்பர்களுடன் இணைந்து புதிய நினைவுகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ்விக்க ஆவலுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

MUST READ