Homeசெய்திகள்விளையாட்டுபுரட்டியெடுத்த பும்ரா... நடுநடுங்கும் ஆஸி., வீரர்கள்..!

புரட்டியெடுத்த பும்ரா… நடுநடுங்கும் ஆஸி., வீரர்கள்..!

-

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த தோல்விக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியின் பயம் முழுவதும் பும்ராவின் மேல் உள்ளது. இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று டிராவிஸ் ஹெட் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய சேனல் ஏபிசி ஸ்போர்ட் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டது. அதில், அனைத்து வீரர்களிடமும் இந்திய அணியில் எந்த வீரர்களுடன் விளையாட விரும்புகிறார்கள் என கேட்கப்பட்டது. அதில் தான் பும்ராவைப் பற்றிய டிராவிஸ் ஹெட்டின் பயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏபிசி ஸ்போர்ட்ஸின் இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஆஸி வீரர்கள் ​​லியோன், கேரி, மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் விராட் கோலியின் பெயரை கூறினர். ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் பும்ராவின் பெயரைக் கூறினர். குறிப்பாக டிராவிஸ் ஹெட், பும்ராவுடன் மீண்டும் விளையாடக் கூடாது என்று கூறினார். டிராவிஸ் ஹெட்டின் இந்த பதில் பும்ராவின் பயம் அவரை எந்தளவுக்கு ஆக்கிரமித்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்பது தெளிவாகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பல சாதனைகளை முறியடிக்க உள்ள விராட் கோலி!
Photo: BCCI

பெர்த் டெஸ்டில், டீம் இந்தியா முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குள் சுருண்டது. பும்ரா முதல் இன்னிங்ஸில் 104 பந்துகள் வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்த இன்னிங்ஸில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தபோதும், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பும்ராவுக்கு எதிராக போராடினர். பும்ரா, டிராவிஸ் ஹெட்டை 89 ரன்களில் வீழ்த்தினார். இந்த இன்னிங்ஸில், பும்ரா, லாபுசாக்னே மற்றும் மெக்ஸ்வீனி ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். தற்போது அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு முன்பு மீண்டும் பும்ரா குறித்த ஆஸ்திரேலிய வீரர்களின் அச்சம் அதிகரித்துள்ளது.

MUST READ