
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணி எடுத்த 356 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.
இதற்கு முன்னர், இதற்கு முன்னர் விசாகப்பட்டினத்தில் 2005- ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போதும், இந்திய அணி இதே 356 ரன்களை எடுத்திருந்தது. இந்த போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, கே.எல்.ராகுல் இணை ஆட்டமிழக்காமல் 233 ரன்களைக் குவித்தது.
இதுவே ஆசியக்கோப்பைப் போட்டியில் ஒரு இணை எடுத்துள்ள அதிகபட்ச ரன்களாகும். மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய இணை எடுத்த அதிகபட்ச ரன்களும் இதுவே. இதற்கு முன் சச்சின், சித்து இருவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக, கடந்த 1996- ஆம் ஆண்டு குவித்த 231 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.
செந்தில் பாலாஜியின் பிணை மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்!
காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே.எல்.ராகுல், சுமார் நான்கு மாதங்களுக்கு பிறகு இந்த போட்டியில் களமிறங்கி சிறப்பாக விளையாடி தனது ஆறாவது ஒருநாள் சதத்தைப் பூர்த்திச் செய்தார். அத்துடன், 53 இன்னிங்ஸில் 2,000 ரன்களைக் கடந்து விராட் கோலிக்கு இணையான சாதனையைப் படைத்தார் கே.எல்.ராகுல்.
