
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏஆர் ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன்… யுவன் ஷங்கர் ராஜா அறிக்கை!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். வழக்கில் பிணைக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத நிலை நிலவியது.
இதனையடுத்து, அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால், அது தொடர்பான பிணை மனு மட்டுமல்லாமல் முழு வழக்கையும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர், பிணைக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை முதன்மை நீதிபதி எஸ்.அல்லி விசாரித்த போது, பதில் மனுவைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கார்த்திக் சுப்புராஜின் அடுத்த சம்பவம்…. ‘ஜிகர்தண்டா 2’ டீசர் வெளியீடு!
இதையேற்ற அவர் விசாரணையை வரும் செப்டம்பர் 15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.