spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை நீதிமன்றம் முன்பு தமிழக மீனவர்கள் தர்ணா போராட்டம்

இலங்கை நீதிமன்றம் முன்பு தமிழக மீனவர்கள் தர்ணா போராட்டம்

-

- Advertisement -

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.50 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த 22 கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி 2 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் புத்தளம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

we-r-hiring

இதில் ஒரு படகில் பயணம் செய்த 12 மீனவர்களுக்கு கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி புத்தளம் நீதிமன்றம் ரூ.3.50 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான தருவைக்குளம் மீனவர்கள் அபராதத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மற்றொரு விசைப்படகில் சென்ற தருவைக்குளத்தை சேர்ந்த 10 மீனவர்களுக்கும் இலங்கை நீதிமன்றம் தலா 3.50 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுளளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் புத்தளம் நீதிமன்றம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ