Homeசெய்திகள்பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு

-

தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளுக்கான  காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், அக்டோபர் 7ம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

MUST READ