spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு - செல்வப்பெருந்தகை இரங்கல்!

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு – செல்வப்பெருந்தகை இரங்கல்!

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்க மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனருமான திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தனது 98-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியோரின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றவர். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் முதன்மை தளபதியாக விளங்கியவர்.

அரசியல், திரைப்படத்துறை, தமிழ்ப் பணி, ஆன்மிகம் என அனைத்து துறைகளிலும் தமது ஈடுபாட்டின் மூலம் முத்திரை பதித்தவர். இலக்கிய ஆர்வத்தின் காரணமாக கம்பன் கழகத்தின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றி இணையற்ற இலக்கியப் பணியாற்றியவர். திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களது மறைவு தமிழக அரசியலுக்கும், திரைத்துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகத்தினர் மற்றும் அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ