spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎச்சரிக்கை! தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

எச்சரிக்கை! தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

-

- Advertisement -

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை! தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

மாண்டஸ் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. செங்கல்பட்டு, தாம்பரம், விழுப்புரம், அரக்கோணம், திருவள்ளூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டிவருகிறது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது தாழ்வான குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ