spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சார்ஜா விமானத்தில் கோளாறுகளை அறிவால் வென்ற விமானிகளுக்கு வாழ்த்து - வெங்கடேசன் எம்.பி

சார்ஜா விமானத்தில் கோளாறுகளை அறிவால் வென்ற விமானிகளுக்கு வாழ்த்து – வெங்கடேசன் எம்.பி

-

- Advertisement -

தொழில் நுட்பத்தால் ஏற்பட்ட கோளாறுகளை அறிவு நுட்பத்தால் வென்ற விமானிகளுக்கு வெங்கடேசன் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 5.32 மணிக்கு சார்ஜா செல்லக்கூடிய விமானம் புறப்பட்டது. 141 பயணிகளுடன் சென்ற விமானம் நாடுவானில் இருந்தபோது இன்ஜினில் கோளாறு இருந்தது தெரியவந்துள்ளது.

அந்த விமானம் சார்ஜா செல்லாமல் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரை இறக்க திரும்பியது. ஆனால் தரை இறக்காமல் மூன்று மணி நேரத்திற்கு மேல் வானில் பறந்துக் கொண்டே இருந்தது.

இந்த இடைப்பட்ட மூன்று மணி நேரத்தில் பயணிகள் என்ன ஆனார்கள்? விமானத்தில் என்ன கோளாறு? என்று தெரியாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் விமானத்தில் உள்ள எரிபொருள் தீர்ந்த பின்னர் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறுகளை அறிவு நுட்பத்தால் வென்ற விமானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

MUST READ