Homeசெய்திகள்தமிழ்நாடு"10 மாணவர்கள் வந்தாலும் போதும்..." – நீலகிரி பள்ளிகள் மூடல் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த...

“10 மாணவர்கள் வந்தாலும் போதும்…” – நீலகிரி பள்ளிகள் மூடல் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த அதிரடி வாக்குறுதி!

-

- Advertisement -

நீலகிரி மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோரி சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் போஜராஜன் கேள்வி எழுப்பிய நிலையில், குறைந்தபட்ச மாணவர்கள் வந்தாலும் பள்ளிகள் மீண்டும் இயக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்துள்ளார்.திருக்கோயில்கள் அறங்காவலர் நியமனக் குழு: திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு முக்கிய இடம்!தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளிகள் மூடல் குறித்தும், கிராமப்புற மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்தும் காரசார விவாதம் நடைபெற்றது.

பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் பேச்சு
சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன், நீலகிரி மாவட்டத்தில் போதிய மாணவர் சேர்க்கை இல்லை எனக் கூறி 3 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறித்துத் தனது கவலையைப் பதிவு செய்தார்.  மலைக்கிராமங்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயங்கும் அரசுப் பள்ளிகளே அப்பகுதி குழந்தைகளின் கல்விக்கு ஒரே ஆதாரமாக விளங்குவதாகவும், இத்தகைய பள்ளிகளை மூடுவதால் ஏழை எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். எனவே, மூடப்பட்ட பள்ளிகளை உடனே மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.திருக்கோயில்கள் அறங்காவலர் நியமனக் குழு: திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு முக்கிய இடம்!

we-r-hiring

அமைச்சர் ராஜ்மோகன் பதில் விளக்கம்
பாஜக உறுப்பினரின் கோரிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய பள்ளிப் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “மாநிலத்தில் ஒரு அரசுப் பள்ளியைக் கூட மூடக் கூடாது என்பதில் நமது அரசு மிகவும் உறுதியான கொள்கையைக் கொண்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் சூழலிலும் கூட பள்ளிகளைத் தொடர்ந்து நடத்தவே அரசு முன்னுரிமை அளித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “தற்போது தற்காலிகமாகச் செயல்பாடின்றி இருக்கும் இந்தப் பள்ளிகளுக்குக் குறைந்தது 10 மாணவர்களாவது மீண்டும் படிப்பதற்கு வந்தால், உடனடியாக அந்தப் பள்ளிகள் மீண்டும் முழுமையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். அமைச்சரின் இந்த அறிவளிப்பினால், மலைக்கிராம மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கையடைந்துள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்: சட்டமன்றத் தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

MUST READ