அதானியின் 60,000 கோடி பெருமானம் உள்ள கடன்களை வாரா கடனாக 15000 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். வாரா கடனை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வங்கிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர் – அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் வெங்கடாசலம் குற்றச்சாட்டியுள்ளாா்.அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 மற்றும் 25 ஆம் தேதி இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டதிற்கு அழைப்பு விடுகபட்டுள்ளது, இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை, சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது
இதில் பேசிய அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் வெங்கடாசலம், ” அகில இந்திய அளவில் 9 வங்கி தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பின் சார்பில் எல்லா வங்கிகளிலும் மார்ச் 24,25 தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம், பொதுதுறை வங்கி, தனியார், கிராமிய வங்கி என அனைத்தும் வாங்கிகளும் வேலை நிறுத்ததில் பங்கேர்க்கும்.
கோடிக்கணக்கான மக்கள் தினமும் வங்கியை பயன்படுத்துகிறார்கள் ஆனால் அதற்கு ஏற்ப பணியாளர்கள் வங்கியில் இல்லை, கடந்த பத்து ஆண்டுகளாக திட்டமிட்டு வங்கிகளில் ஊழியர்களை குறைத்துக் கொண்டே வருகிறார்கள், இதனால் ஊழியர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது
பொதுத்துறை நிறுவனங்களில் இது போன்ற நெருக்கடி ஏற்பட்டால், அரசாங்கம் விரும்பும் படியாக பொதுமக்கள் தனியார் வங்கிகளுக்கு சென்று விடுவார்கள்.மேலும் ஒன்றிய அரசு தனியார் மையம் செய்ய வேண்டும் என விரும்புகிறது ஆனால் நாங்கள் அதை எதிர்க்கிறோம், வங்கி வாடிக்கையாளர்களுக்கு தனியார் வங்கி அனுப்பவும் முயற்சியாக தான் இதை பார்க்கிறோம்
வங்களின் லாபம் இப்பொழுது குறைகிறது, அதற்குக் காரணம் பெரும் முதலாளிகளுக்கு கொடுத்த கடன்கள் எல்லாம் வசூலிக்கப்பட முடியாமல் ரத்து செய்யப்பட்டுவதால் தான் லாபம் குறைகிறது, லாபத்தை அதிகரிக்க ஊழியர்களின் ஊதியச் செலவை குறைக்க பார்க்கிறார்கள், அதனால் தான் பணியாளர் பணியாளர்களை குறைத்து வருகின்றனர்.
இப்பொழுது இரண்டு லட்சம் இடங்கள் காலியாக உள்ளது, பொதுத்துறை வாங்கிகளில் ஆட்கள் எடுக்கவில்லை என்றால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆவது அதை வலியுறுத்தி தான் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அணைத்து வார இறுதியிலும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தேவை, ஊழியர்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர், சமீபத்தில் பீகாரில் ஒரு சம்பவம் ஒன்று நடந்தது அதில் வங்கி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டார் எனவே வாங்கிகளில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு தேவை.
பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலியான ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் இயக்குனர்கள் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள எல்லா நகரங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் இந்த போராட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் அதனை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதானியின் 60,000 கோடி பெருமானம் உள்ள கடன்களை வாரா கடனாக 15000 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். வாரா கடனை குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். 70% வரை வாரா கடங்களை தள்ளுபடி செய்து வங்கிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள் . அந்த நஷ்டத்தை சரி செய்ய வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணம் உள்ளிட்டவைகளை வங்கிகள் பெறுகிறது.
தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைத்து தரவேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்