சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 14 அடி நீளம் கொண்ட டால்பின் இறந்த நிலையில் ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நொச்சிக்குப்பம் குடியிருப்பு பகுதிக்கு எதிரே இன்று மதியம் இறந்த நிலையில் சுமார 14 அடி நீளம் கொண்ட அரிய வகை பெண் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை கண்ட கடற்கரை பகுதியில் இருந்த பொதுமக்கள், பட்டினப்பாக்கம் காவல் துறையினர் மற்றும் கிண்டி சரக வனத் துறையினர் ஆகியோருக்கு தகவல் தெரித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், டால்பின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் வண்டலூர் சரக வனத்துறை மருத்துவக்குழுவினர் டால்பினை பிரேத பரிசோதனை செய்த பின், டால்பின் உடலானது கடல் மணற்பரப்பில் அடக்கம் செய்யப்பட உள்ளது.