Homeசெய்திகள்தமிழ்நாடு2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு!

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு!

-

 

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு!

2ஜி முறைகேடு புகார் வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்து மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி! – குறைந்தது தங்கம் விலை!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 15 பேரையும் விடுதலை செய்து கடந்த 2017- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி ரோஸ் அவென்யூ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018- ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்திருந்தது.

கடந்த 2018- ஆம் ஆண்டு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கலாம் என ஆறு ஆண்டுகள் கழித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இதையடுத்து, 2ஜி வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ