
டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இன்று (மார்ச் 21) இரவு 09.30 மணிக்கு அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!
அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்ததற்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!
இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மக்களவைத் தேர்தல் தோல்வி பயத்தால் பா.ஜ.க. அரசு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பா.ஜ.க. தலைவர்கள் எவரும் விசாரணையையோ, கைது நடவ்டிக்கையையோ எதிர்க்கொள்வதில்லை. எதிர்க்கட்சித் தலைவர்களை இடைவிடாது பா.ஜ.க. அரசு துன்புறுத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.