spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாலை விபத்தில் 3 பேர் பலி! பெத்திக்குப்பத்தில் பெரும் சோகம்

சாலை விபத்தில் 3 பேர் பலி! பெத்திக்குப்பத்தில் பெரும் சோகம்

-

- Advertisement -

சாலை விபத்தில் 3 பேர் பலி! பெத்திக்குப்பத்தில் பெரும் சோகம்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பத்தில் சென்னை, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அந்த மூன்று இளைஞர்கள் தாங்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடி  ஒருகட்டத்தில்  முன்னே சென்ற லாரியை முந்திச் செல்ல சென்றுள்ளனர்.

சாலை விபத்தில் 3 பேர் பலி! பெத்திக்குப்பத்தில் பெரும் சோகம்
மூன்று இளைஞர்கள் பலி

லாரி வளைவில் அவர்கள் முந்தி செல்லும்போது, விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் சிதறி விழுந்து சம்பவம் நடந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

we-r-hiring

இச்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் அந்த மூன்று இளைஞர்களும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. தயாளன் (வயது 19), சார்லஸ் (வயது 21), ஜான் (வயது 20) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் உடற் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சாலை விபத்தில் 3 பேர் பலி! பெத்திக்குப்பத்தில் பெரும் சோகம்
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ்

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த சிப்காட் போலீசார் விபத்து ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

MUST READ