
தமிழகத்தில் 33 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்!
அதன்படி, சேலம், மயிலாடுதுறை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட அமலாக்கத்துறை எஸ்.பி.யாக இருந்த வருண் குமார் ஐ.பி.எஸ்., திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த அன்கிட் ஜெயின், சென்னை தி.நகர் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து உதவி ஆணையராக இருந்த சக்திவேல், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு உதவி ஆணையராக இருந்த மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.நகர் காவல் உதவி ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக இருந்த சிவக்குமார், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!
மதுரை வடக்கு மாவட்ட உதவி ஆணையராக இருந்த அரவிந்த், சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.யாக மீனா நியமிக்கப்பட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராக இருந்த பவன் குமார் ரெட்டி, தாம்பரம் சட்டம்- ஒழுங்கு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.