Homeசெய்திகள்தமிழ்நாடு"5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

 

"5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஏப்ரல் 04- ஆம் தேதி முதல் ஏப்ரல் 07- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏப்ரல் 06- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும்; வடக்கு உள் மாவட்டங்களில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்!

தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் நாளை (ஏப்ரல் 03) மழைக்கு வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ