Homeசெய்திகள்இந்தியாபாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!

பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!

-

 

பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!

பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்பு மருந்துகள் குறித்து தவறான விளம்பரம் வெளியிட்ட வழக்கில் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.

“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி”- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தவறான தகவல் பரப்பும் விளம்பரத்தைத் தயாரித்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (ஏப்ரல் 02) காலை 11.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த தொடர்பாக, பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, நீதிபதிகள் முன்பு பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினர்.

அப்போது, மன்னிப்பை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை எனவும், நீங்கள் செய்திருப்பது மிகத் தீவிரமான அவமதிப்பு என்றும் நீதிபதிகள் கட்டமாகத் தெரிவித்து, பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க மறுப்புத் தெரிவித்தனர்.

அருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா!

அத்துடன், மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என நினைக்காதீர்கள் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

MUST READ