spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 மீனவர்கள் சென்னை வருகை!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 மீனவர்கள் சென்னை வருகை!

-

- Advertisement -

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி  மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி கைதுசெய்து, அவர்களது சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

we-r-hiring

அதன் அடிப்படையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். இந்நிலையில் இலங்கை நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் என 5 மீனவர்களை விடுதலை செய்தது. இதனை அடுத்து, 5 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் 

பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்கள் 5 பேருக்கும், தூதராக விமான டிக்கெட்டுகள் ஏற்பாடுகள் செய்து, நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையம் வந்த 5 மீனவர்களையும், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

MUST READ