
50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிவு இருந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

‘மிக்ஜாம்’ புயல் மற்றும் கனமழை பாதிப்பு தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், “மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் அமர்த்தி வருகிறோம். கடலோர பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான் இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆறுகளில் செல்லும் வெள்ளநீரை கடல் உள்வாங்கவில்லை. புயல் காரணமாக, கடல் சீற்றத்துடன் உள்ளதால், வெள்ள நீர் உள்வாங்கப்படவில்லை.
தத்தளிக்கும் தலைநகரம்… ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!
அனைத்து துறையினரும் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிவு இருந்துள்ளது. நீர்நிலைகள் மற்றும் கடற்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில், 2.43 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.