Homeசெய்திகள்தமிழ்நாடுSC/ST நலனுக்கான ஒன்றிய அரசின் நிதி 90% குறைப்பு - RTI மூலம் தகவல்

SC/ST நலனுக்கான ஒன்றிய அரசின் நிதி 90% குறைப்பு – RTI மூலம் தகவல்

-

SC/ST நலனுக்கான ஒன்றிய அரசின் நிதி 90% குறைப்பு – RTI மூலம் தகவல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி 2022-2023 நிதியாண்டில் ரூ.159 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

Modi

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி விரங்கள் பற்றி கோரப்பட்ட தகவலுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒன்றிய அரசின் சார்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு பிரத்யேகமாக கிடைக்கபெற்ற மொத்த நிதியின் விபரங்கள்(2018-19 முதல் 2022-23 நிதியாண்டுகள் வரை ரூ.3,019.65 கோடி ஒன்றிய அரசும் தன் பங்கிற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

modi

கடந்த 2018-19 முதல் 21)22-23 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.3019.65,00,000 (மூவாயிரத்தி பத்தொன்பது கோடியே 65 லட்சம் வரை) ஷ நிதி ஒதுக்கியுள்ளது. அதில் கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் ரூ.1.553 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக குறைக்கப்பட்டு கடைசியாக கடந்த 20122-23 நிதியாண்டில் வெறும் ரூ.159.78 கோடிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளனர். இதன் மூலம் ஒன்றிய அரசு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத்திட்ட புறக்கணத்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நிதி ஒதுக்கீடுகளை தொடர்ந்து குறைத்து வருவதால் மாநிலத்தில் பல வருடங்களாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக பிரத்யகல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு பணிகள் பாதியிலேயே முடங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

MUST READ