Homeசெய்திகள்தமிழ்நாடு“பாஜக மாடல் டோல்கேட்”- பரனூர் சுங்கச்சாவடியில் மோசடி அம்பலம்

“பாஜக மாடல் டோல்கேட்”- பரனூர் சுங்கச்சாவடியில் மோசடி அம்பலம்

-

“பாஜக மாடல் டோல்கேட்”- பரனூர் சுங்கச்சாவடியில் மோசடி அம்பலம்

பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் பெரும் மோசடி அம்பலமாகியுள்ளது.

ஆகஸ் 2019-ஜூன் 2020 வரை பயணித்த 1.17 கோடி வாகனங்களில் 6.23 லட்சம் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இவ்வழியில் பயணித்த 53.27% வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாதது சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. அதாவது பரனூர் சுங்கச்சாவடி வையே செல்லும் 10 வாகனங்களில் 5 வாகனங்கள் விஐபி சலுகையில் செல்கின்றனா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக சென்ற 88.92 லட்சம் வாகனங்களில் 32.39 லட்சம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் வாகன ஓட்டிகளிடம் முறைகேடாக 6.5 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image

இதனை டிவிட்டரில் விமர்சித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “செங்கல்பட்டு – பரனூர் டோல் கேட்டில் ஓராண்டில் ஒரு கோடியே 12 லட்சம் வாகனங்கள் சென்றுள்ளது. இதில் 62 லட்சம் வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாத விஐபி வாகனங்கள். நவீன ஊழலின் அடையாளமான பரனூர் டோல்கேட்டை இனி “பாஜக மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ