spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிறந்து 12 மணிநேரங்களில் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

பிறந்து 12 மணிநேரங்களில் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

-

- Advertisement -

பிறந்து 12 மணிநேரங்களில் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

செங்கல்பட்டு அருகே சாலையோரம் வீசப்பட்ட பிறந்து 12-மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார், அதனை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

baby

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் வள்ளல் அதியமான் தெருவில் உள்ள சிமெண்ட் சாலை ஓரம் பிறந்து 12-மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை வீசப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே சாலையோரத்தில் கேட்பாரற்று ஆண்குழந்தை வீசப்பட்டு கிடந்தது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு கடைக்கு வந்தவர்கள் பார்த்த போது குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

we-r-hiring

baby

போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை நலமாக உள்ள நிலையில் சென்னையில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தை பிறந்து தொப்புள் கொடியுடன் வீசி சென்ற நிலையில் குழந்தையை வீசி சென்ற பெற்றோர் யார்? யாரேனும் குழந்தையை கடத்தி வந்து இங்கு வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

MUST READ