Homeசெய்திகள்தமிழ்நாடுசாலையோரம் படுத்திருந்தவர் தீவைத்து எரித்துக் கொலை

சாலையோரம் படுத்திருந்தவர் தீவைத்து எரித்துக் கொலை

-

- Advertisement -

கோவை சிங்காநல்லூரில் சாலையோரம் படுத்துகிடந்த தொழிலாளியை தீவைத்து எரித்து கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

murder

we-r-hiring

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30). இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். கடந்த 14-ஆம் தேதி இரவு சுரேஷ் அந்த பகுதியில் வழக்கம் போல சாலையோரத்தில் தூங்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சுரேஷ் மீது டீசலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார்.

சுரேசின் உடல் முழுவதும் தீ பரவியதில் 90 சதவீதம் உடல் கருகிய நிலையில், சுரேஷை அக்கம்பக்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தீவைத்த மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் தீவைத்து எரித்து விட்டு, தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதனை வைத்து ஆய்வு செய்தபோது அவருடன் அதே பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு சாலையில் தங்கியிருக்கும் சுப்பிரமணி (57), என்ற தொழிலாளியை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் ஒன்றாக சேர்ந்த மதுகுடித்ததாகவும், பையில் இருந்த பணத்தை சுரேஷ் எடுத்ததாக சந்தேகப்பட்டு வாக்குவாதம் செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுரேஷ் தூங்கும்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பாட்டிலில் டீசல் வாங்கி ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாகவும் கூறியுள்ளார். கைது செய்த சுப்பிரமணி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே தடை உத்தரவை மீறி பாட்டிலில் டீசல் வழங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் பாஸ்கரன் (62), கேசியர் பாலகிருஷ்ணன் (57) ஆகிய இருவரையும் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

MUST READ