Homeசெய்திகள்தமிழ்நாடுவிண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்.1 விண்கலம்

விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்.1 விண்கலம்

-

விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்.1 விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட்

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்ய பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆயிரத்து 485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 125 நாட்கள் பயணித்து பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீட்டர் தொலைவில் லாக்ராஞ்சியன் பாயிண்ட் 1 பகுதியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

rocket

423 கோடி ரூபாய் செலவில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. சுமார் 400 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. சூரியனை நோக்கிய கோணத்தில் நிலைநிறுத்தப்பட்டு 7 விதமான கருவிகள் மூலம் ஆதித்யா எல் 1 ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. பிளாஸ்மாக் அனலைசர், காந்த புலன்களின் இருப்பிடம் சூரியனில் உள்ள துகள்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும். ஆதித்யா எல் 1 விண்கலம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

MUST READ