Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. முனைப்பு!

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. முனைப்பு!

-

 

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. முனைப்புக்காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீர் அருந்திய நபருக்கு உடல்நலக்குறைவு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க.வை இடம் பெற செய்ய பா.ஜ.க.வின் தேசிய தலைமை முனைப்புக் காட்டி வருகிறது.

டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!
Photo: AIADMK

அதன் ஒருபகுதியாக, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா எம்.பி., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் எம்.பி. நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு….அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

எனினும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், அரசியல் இல்லை என்றும் ஜி.கே.வாசன் எம்.பி. மறுத்துள்ளார். இதனிடையே, ஜி.கே.வாசன் மூலம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. கூட்டணியில் இணைய ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டதாகவும், அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசனிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து, கூட்டணி தொடர்பாக அடுத்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

MUST READ