Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானது!

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானது!

-

 

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானது!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டுள்ளார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு நடிகர் ரஜிகாந்த் வாழ்த்து

அதில், உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வலியுறுத்தப்படும், நீட் தேர்வுக்கு பதிலாக மாற்றுத்தேர்வு முறை தேவை. நீட் தேர்வுக்கு மாற்றாக +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தேவை, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறை, சிலிண்டர் சிலை கட்டுப்பாடு, பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 3,000 உரிமைத்தொகை வழங்க வலியுறுத்தப்படும்.

நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தப்படும், முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தப்படும் உள்ளிட்டவை முக்கிய வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி! – குறைந்தது தங்கம் விலை!

‘தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்’ கொள்கை பிரகடனத்தோடு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ