அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்!
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்குகள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த வழக்குகள் தொடர்பாக, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நேரில் வழங்கியிருந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்திருந்தது தேர்தல் ஆணையம்.
அதன் தொடர்ச்சியாக, அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு, அந்த கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதேபோல், தமிழ்மகன் உசேனை அ.தி.மு.க.வின் அவைத்தலைவராகவும், திண்டுக்கல் சீனிவாசனை கட்சியின் பொருளாளராகவும், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களாகவும் அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.
சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது!
இந்திய தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.