பிரிவினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக திரைப்பட சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணியின் கலை மற்றும் இலக்கிய பிரிவின் மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்லீயை நினைத்து எப்படி பெருமைப்படாமல் இருப்பது….. ஜவான் ப்ரிவியூ குறித்து விக்னேஷ் சிவன்!
“வெளிநாட்டு மதக் கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்; மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்” என்ற வாசகத்துடன் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் மதபோதகர் அணியும் உடையுடன் இளம்பெண்ணுடன் நடனமாடும் வீடியோவை கனல் கண்ணன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
முகத்தில் ரத்த காயங்களுடன் கொலை வெறியில் அர்ஜுன் தாஸ்…. வெளியானது அநீதி பட டீசர்!
அது தொடர்பான விசாரணைக்காக, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கனல் கண்ணன் ஆஜரானார். அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், அதன் பிறகு அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.