Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. கொடி, பெயரைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை!

அ.தி.மு.க. கொடி, பெயரைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை!

-

 

OPS

அ.தி.மு.க. கொடி, கட்சியின் பெயரைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!

அ.தி.மு.க.வின் பெயர், கட்சி கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (நவ.07) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், மக்கள் மற்றும் கட்சினரிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார்” என்று வாதிட்டார்.

வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!

வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி சதீஷ்குமார், “எத்தனை முறை வழக்கு தொடருவீர்கள்?; எத்தனை முறை நேரம் கேட்பீர்கள்; எத்தனை முறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன், அ.தி.மு.க.வின் பெயர், கட்சி கொடி, லெட்டர் பேட் போன்றவற்றைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

MUST READ