Homeசெய்திகள்இந்தியாசத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!

-

- Advertisement -

 

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!
Photo: ANI

சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பாதுகாப்பு சிக்கல் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 03.00 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடையவுள்ளது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள இடங்களில் கூடுதலாக காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

மாநில காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் என சுமார் 60,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை”- தமிழக அரசு அறிவிப்பு!

சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் வரும் நவம்பர் 17- ஆம் தேதி இரண்டாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

MUST READ