Homeசெய்திகள்தமிழ்நாடுஉதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

-

உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

சனாதனம் பற்றி பேச்சு, மக்களை திசை திருப்ப உதயநிதி மேற்கொள்ளும் முயற்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதலமைச்சர் உடனடியாக நீக்க வேண்டும்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்!
File Photo

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திராவிடம் என்பார்கள், பின் சனாதனம் என்பார்கள். இவை இரண்டையும் கூறி திமுக மக்களை ஏமாற்றுகிறது. இதுபோன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம். சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சை எந்த மதத்தினரும் விரும்ப மாட்டார்கள். அவரது பேச்சு வெறுக்கத்தக்க ஒன்று. சனாதனம் பற்றி பேச்சு, மக்களை திசை திருப்ப உதயநிதி மேற்கொள்ளும் முயற்சி. திமுகவின் ஊழலை திசை திருப்பவே சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். மதத்தை மதிக்க வேண்டும். எந்த மதமாக இருந்தாலும் சரி, மதத்தை இழிவுபடுத்துவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டணி கட்சியினரே முகம் சுளிக்கும் அளவுக்கு வாரிசு அமைச்சர் பேசியுள்ளார்.

ஒரு மதத்தை இழிவுபடுத்தினால் அது யாராக இருந்தாலும் அது தண்டனைக்குரிய விஷயம். உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறினால் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும்” எனக் கூறினார்.

MUST READ