Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜெயக்குமார்

அண்ணாமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜெயக்குமார்

-

அண்ணாமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜெயக்குமார்

பாஜகவுடனான கூட்டணி விவகாரத்தில் அதிமுகவில் தெளிவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதிமுகவில் தெளிவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. எந்த கருத்தையும் கூறவிரும்பவில்லை. அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்வார். அண்ணாமலை குறித்து கருத்து கூறவிரும்பவில்லை. எங்கள் நிலைப்பாட்டைத்தான் சொல்ல முடியும்.

எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்தபோது ஆதித்தனார் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தார். தமிழர் தந்தையின் பெருமை உலக அறிய செய்தார். அதிமுக- பாஜக கூட்டணி முறிவு குறித்து எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி விவகாரத்தில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் எந்த குழப்பமும் இல்லை. தெளிவான நிலைபாட்டை எடுத்துள்ளோம்” என்றார்.

MUST READ