spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. நிர்வாகி வெட்டிப் படுகொலை!

அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிப் படுகொலை!

-

- Advertisement -

 

அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிப் படுகொலை!
Video Crop Image

அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

we-r-hiring

கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், வேங்கடமங்கலம் ஊராட்சியின் 9வது வார்டு உறுப்பினரான அன்பரசன், நேற்றிரவு (அக்.21) நான்கு பேர் கொண்ட கும்பலால் படுகொலைச் செய்யப்பட்டார். கீரப்பாக்கம் பகுதியில் நவீன் குமார் என்பவரின் படத்திறப்பு விழாவிற்கு சென்ற போது, அவரது கார் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டனர்.

அங்கிருந்து அன்பரசனும், அவரது நண்பர்களும் தப்பியோடினர். அப்போது, அன்பரசனை ஓட ஓட விரட்டிச் சென்ற கும்பல், சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக, உடல் வைக்கப்பட்டுள்ளது.

அன்பரசைக் கொலைச் செய்தவர்கள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கேளம்பாக்கம்- வண்டலூர் சாலையில் அன்பரசனின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, முழக்கங்களும் எழுப்பப்பட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர், உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

MUST READ