spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சிகாகோ சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

சிகாகோ சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

-

- Advertisement -

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக 17 நாட்கள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு கடந்த 28-ஆம்
தேதி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

we-r-hiring

cmo

பின்னர் அமெரிக்க வாழ் தமிழர்கள் உடனான  சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.  இந்த பயணத்தில், 4,600 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், 8 நிறுவனங்களுடன் ரூ.1,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

cmo

இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து இன்று சிகாகோ நகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார். அங்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து,  முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

MUST READ