அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் அன்பில் மகேஷ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் நெஞ்சுவலி காரணமாக தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு விழாவுக்காக கிருஷ்ணகிரி செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தருமபுரி அருகே காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார்.

கடைசியாக அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 9 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் 225 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.