spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு12ம் வகுப்பு மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து..

12ம் வகுப்பு மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து..

-

- Advertisement -

12ம் வகுப்பு மாணவர்கள் நாளை பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ( திங்கள் கிழமை) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகின்றது.  இதனையொட்டி மாணவ , மாணவிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது ட்விட்ட பக்கத்தில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை திங்கள்கிழமை (13.03.2023) பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றது. தமிழகம் மற்றும் புதுவையில் 7 ஆயிரத்துக்கும் கூடுதலான பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர்.

மாணவர்கள் பொதுத்தேர்வு

we-r-hiring

அவர்கள் அனைவரும் இத்தேர்வில் சாதனைகளை படைப்பதற்காக எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்தேர்வுகளின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் முதன்மையானது பதற்றத்தைக் குறைப்பதாகும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும். அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக திகழ வேண்டும் ”என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ