சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (செப்.05) காலை 10.00 மணியளவில் 43வது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைது
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்து துறை வாரியாக முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கத்தையும், பட்டத்தையும் வழங்கி பாராட்டினார். அதைத் தொடர்ந்து, இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
ஆவடி அருகே இரண்டு கோவில்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை
தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், ஒரே மேடையில் அமைச்சரும், ஆளுநரும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.