Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: யாராக இருந்தாலும் நடவடிக்கை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: யாராக இருந்தாலும் நடவடிக்கை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

-

- Advertisement -

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் அல்ல என்றும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாளான இன்று அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியபோது கூறியதாவது:- அண்ணா நகர் வழக்கை பொறுத்தவரை 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருடைய உறவினரான இளம் சிறார் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி தங்களை தவறாக நடத்தியதாகவும், குற்றத்திற்கு காரணமான சதிஷ் என்பவரை கைது செய்யாமலும் சிறுமியரின் பெற்றோர் குற்றம்சாட்டியதை தொடர்ந்து இந்த வழக்கு கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்படுகின்ற சதீஷும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளார்கள். இந்த உத்தரவை எதிர்த்து காவல்துறை செய்த முறைகேட்டில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று முடிவுக்கு வந்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறையிலிருந்து 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்கள். உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கில் அதிமுகவை சேர்ந்த 103-வது வட்ட செயலாளர் சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரையும் நேற்று கைது செய்து அவர்கள் நீதிமன்ற காவலில் உட்படுத்தப்பட்டுள்ளனர். சுதாகர் அதிமுகவின் வட்டப் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் நிச்சயமாக திமுக உறுப்பினர் இல்லை. திமுக ஆதரவாளர். அமைச்சரோடு அரசியல்வாதிகளோடு படம் எடுத்துள்ளார் தவறில்லை. ஆனால் அது திமுககாரராக இருந்தாலும் நான் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். ஆனால் அவர் திமுக நிர்வாகி அல்ல திமுக அனுதாபி மட்டுமே. அனுதாபியாக இருந்தாலும் கூட அந்த குற்றவாளியை நாங்கள் காப்பாற்றவில்லை. உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். குண்டர் சட்டத்திலும் கைதுசெய்துள்ளோம்.

என்னுடைய அரசை பொருத்தவரை எந்தக்கட்சியாக இருந்தாலும் எந்த தனிப்பட்ட நபராக இருந்தாலும் சரி, ஏன் காவல் துறையாக இருந்தாலும் சரி, பெண்களின் பாதுகாப்புதான் முக்கியமே தவிர நாங்கள் வேறு எதையும் எதிர்பார்ப்பது இல்லை. ஆகையால் எதிர்க்கட்சி நண்பர்களை நான் கேட்டுக்கொள்வது குற்றச்செயல்கள் எதுவாக இருந்தாலும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நேர்மையாக நியாயமாக கடுமையாக நடவடிக்கை எடுத்துவரும் அரசை குறை சொல்லாமல் பெண்களின் பாதுகாப்பை தங்களால் ஈன்ற ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும் என்பது கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ