spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் ஸ்டாலினுக்கு ‘Go Back சொல்வோம்’: அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலினுக்கு ‘Go Back சொல்வோம்’: அண்ணாமலை

-

- Advertisement -

முதல்வர் ஸ்டாலினுக்கு ‘Go Back சொல்வோம்’: அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடகாவிற்கு சென்றால் போராட்டம் நடத்துவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

திமுக கதறல் - பாஜக கதறல் : யார் யாரை மிரட்டிப்பார்க்க நினைக்கிறார்கள்?
ஸ்டாலின் அண்ணாமலை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கர்நாடகாவிற்கு சென்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக Go Back செல்வோம். மேகதாது விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில், கர்நாடகாவிற்கு முதலமைச்சர் சென்றால் போராட்டம் நடத்துவோம். காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் பாஜக எந்த அரசியலும் செய்யவில்லை. முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. மேகதாது விவகாரத்தை பொருத்தவரை கர்நாடக அரசையும் டி.கே. சிவக்குமாரையும் கண்டிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனமில்லை. காங்கிரஸ் கட்சியை கண்டிக்க மனமில்லை. முல்லை பெரியாறு அணையிலும் நம் உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது மேகதாது விவகாரத்திலும் நம் உரிமை விட்டுக்கொடுக்கப்படுகிறது.” எனக் கூறினார்.

MUST READ